பல்லவி
எம்மொழி தமிழ்
வாருங்கள் கற்போமே
அம்மா அப்பா
பாட்டா பாட்டி
பேசுவது தமிழ்
நாமும் பேசுவோம்
(எம்மொழி)
சரணம்
எழுத்துக்கூட்டி வாசிப்பதற்கு
விரைவில் கற்றிடுவோம்
தமிழில் கதைகளை நாமும் எழுதி
பலரையும் மகிழ்விப்போம்
எங்கள் சுயமொழி அழியாமல்
என்றும் காத்திடுவோம்
இயல், இசை, நாடகம்
முத்தமிழை வளர்த்திடுவோம்
இயற்றியவர்: புனிதம் பேரின்பராஜா
Click here for printer-friendly School Song in PDF format